நாட்டைச் சீரழித்த ராஜபக்ச குடும்பத்துக்கே புனர்வாழ்வளிக்க வேண்டும்! – சாணக்கியன் ஆவேசம்
8 view
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு 5 ஆயிரம் நாட்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். புனர்வாழ்வுச் சட்டம் ஊடாக இந்த நாட்டைச் சீரழித்த மஹிந்த ராஜபக்ச குடும்பம் உட்பட இந்த அரசுடன் இணைந்த அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அவர் கூறினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதனைவிட மோசமான புனர்வாழ்வளித்தல் சட்டத்தைக் கொண்டுவர அரசு முற்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட மக்களை வன்முறைக்குள்ளாக்கும் அனைத்துச் சட்டங்களையும் நீக்குமாறு வலியுறுத்தி நேற்று மாலை மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்க மக்கள் ஒன்றியம், பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பேரணியாகக் கல்முனை வீதியூடாகக்…
The post நாட்டைச் சீரழித்த ராஜபக்ச குடும்பத்துக்கே புனர்வாழ்வளிக்க வேண்டும்! – சாணக்கியன் ஆவேசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டைச் சீரழித்த ராஜபக்ச குடும்பத்துக்கே புனர்வாழ்வளிக்க வேண்டும்! – சாணக்கியன் ஆவேசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
