காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் உயிரிழப்பு
39 view
கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் 7 பேரில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை பதாகை அகற்றப்பட்ட நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சிறுவர்கள் அனைவரும் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
