மினுவாங்கொடைத் துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

24 view
கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டனர் எனத் தெரிவித்து இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். கலேவெல பகுதியில் வைத்து மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நான்காவது சந்தேகநபர் கிரிவுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், தந்தை மற்றும் அவரின் மகன்கள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். இந்தச் சம்பவத்தில் 51 வயதான தந்தையும், 23 மற்றும் 24 வயதுடைய மகன்கள் இருவரும் உயிரிழந்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் கம்பஹா – படல்கம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் இரு குடும்பங்களுக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டம் பறக்கவிட்டுக் கடந்த 2017ஆம் ஆண்டு உருவான பிரச்சினை இதுவரை நீடிக்கின்றது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில்…
The post மினுவாங்கொடைத் துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース