அரச நிதிச் சபையின் விசாரணையில் ஹர்ஷ டி சில்வா தன்னிச்சையாகச் செயற்பட்டுள்ளார் – அனுபா பாஸ்குவல்
15 view
நிலக்கரி ஒப்பந்தம் தொடர்பான அரச நிதிச் சபையின் விசாரணையில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தன்னிச்சையாகச் செயற்பட்டுள்ளார் என இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இந்தப் பிரச்சினையை முன்வைத்தார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அதற்கு பதிலளிக்க முற்பட்டபோது, சிறப்புரிமைக் குழுவின் முன் உண்மைகளை முன்வைக்குமாறு சபாநாயகர் தெரிவித்தார். சபாநாயகரின் இந்த அறிவிப்பால் அவையில் காரசாரமான விவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி, சந்திம வீரக்கொடி, மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரும் இந்த உரையாடலில் பங்கேற்ிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அரச நிதிச் சபையின் விசாரணையில் ஹர்ஷ டி சில்வா தன்னிச்சையாகச் செயற்பட்டுள்ளார் – அனுபா பாஸ்குவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச நிதிச் சபையின் விசாரணையில் ஹர்ஷ டி சில்வா தன்னிச்சையாகச் செயற்பட்டுள்ளார் – அனுபா பாஸ்குவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
