சிறப்புரிமை பிரச்சினை; நாடாளுமன்றில் குழப்பம்!
35 view
நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, தமது அதிகாரங்களை மீறிச்செயற்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றில் முறையிடப்பட்டது. ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்கொய்ல் இந்த முறைப்பாட்டை இன்று நாடாளுமன்ற சபையில் முன்வைத்தார். அதிகாரிகளை விசாரணை செய்யும்போதும், நடைமுறைகளை பின்பற்றும்போதும் அவர், அதிகார துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்று அவர் குற்றம் சுமத்தினார். இதன்போது அரச மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மத்தியில் கடுமையான வாதவிவாதங்கள் இடம்பெற்றன. இந்த முறைப்பாட்டுக்கு பதிலளிக்க ஹர்ச டி சில்வா முயன்றபோதும், சபாநாயகர் அதற்கு இடமளிக்கவில்லை. தமது கருத்தை நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிடம் முன்வைக்குமாறு சபாநாயகர் அவரிடம் கூறினார். இதன்போது ஹர்ச டி சில்வாவுக்கு ஆதரவாக பல உறுப்பினர்களும் தமது கருத்துக்களை முன்வைக்க, சபையில் குழப்பநிலை ஏற்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஷின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமது கருத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்படுமானால், அதனை அவர்கள், சிறப்புரிமை குழுவிலேயே முன்வைக்க வேண்டும். அதனை நாடாளுமன்ற…
The post சிறப்புரிமை பிரச்சினை; நாடாளுமன்றில் குழப்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறப்புரிமை பிரச்சினை; நாடாளுமன்றில் குழப்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
