ஞானம் அறக்கட்டளை மோசடி – ராஜ்சங்கருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
12 view
ஞானம் அறக்கட்டளை நிறுவனமானது மக்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்றை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் இருபத்தி இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அபகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாலசிங்கம் ராஜ்சங்கருக்கு எதிரான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரின் மனைவி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். ஞானம் அறக்கட்டளையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட மனிதாபிமான உதவியில் 22 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக சம்பந்தப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கு பொறுப்பாக இருந்த இயக்குனர் பாலசிங்கம் ராஜ்சங்கர் மற்றும் அவரது மனைவி உமா ஞானசேகரம் ராஜ்சங்கர் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் போலி ஆவணங்களை தயாரித்து பணத்தை அபகரித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பாலசிங்கம்…
The post ஞானம் அறக்கட்டளை மோசடி – ராஜ்சங்கருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஞானம் அறக்கட்டளை மோசடி – ராஜ்சங்கருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
