யாழ் மாவட்டத்தில் 63 வர்த்தகர்களுக்கு ஆப்பு!
12 view
கடந்த செப்ரெம்பர் மாதம் யாழ். மாவட்டத்தில் 63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் அறவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலர்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி ந.விஜிதரன் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாக யாழ்ப்பாணம் மாவட்டம் பூராகவும் பாவனையாளர் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதன் அடிப்படையில் 63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கு நீதிமன்றத்தினால் 25 இலட்சத்து 74 500 ரூபா தண்ட பணமும் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்தவகையில், வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலையினை காட்சிப்படுத்த தவறியமை, அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி பொருட்களினை பொதுமக்களுக்கு விற்றமை, உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் விவரங்கள் இல்லாது பொருட்களை காட்சிப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் காட்சிப்படுத்தியமை, நுகர்வோரை ஏமாற்றும்…
The post யாழ் மாவட்டத்தில் 63 வர்த்தகர்களுக்கு ஆப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் மாவட்டத்தில் 63 வர்த்தகர்களுக்கு ஆப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
