பாலியல் குற்றச்சாட்டு: ஒரு மாதத்திற்குப் பின் கிரிக்கெட் நட்சத்திரம் கைது
19 view
நேபாளம், ஓக.06 பாலியல் வல்லறவு குற்றச்சாட்டு தொடர்பாக பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டு சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் நாடு திரும்பிய நேபாள கிரிக்கெட் நட்சத்திரம் சந்தீப் லமிச்சானை காத்மண்டு பொலிஸார் இன்று கைதுசெய்தனர். காத்மண்டு விமான நிலையத்தை லமிச்சான் வந்தடைந்ததும் அவரை கைதுசெய்ததாக காத்மாண்டு மாவட்ட பொலிஸ் பேச்சாளர் தினேஷ் ராஜ் மைனாலி தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடுவதற்காக நாடு திரும்புவதாக இதற்கு முன்னர் தனது பேஸ்புக்கில் லமிச்சான் பதிவிட்டிருந்தார். ‘விசாரணையின் சகல கட்டங்களிலும் நான் முழுமையாக ஒத்துழைப்பேன், நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்ட ரீதியான போராட்டத்தில் ஈடுபடுவேன். நீதி வெல்லட்டும்’ என்று லமிச்சான் பதிவிட்டுள்ளார். காத்மண்டு நீதிமன்றத்தினால் லமிச்சானுக்கு கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நேபாள கிரிக்கெட் அணித் தலைவர் பதவியில் இருந்து லமிச்சான் நீக்கப்பட்டார். காத்மண்டு ஹோட்டல் அறை ஒன்றில் 22 வயதான லமிச்சான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுமி சுமத்திய குற்றச்சாட்டைத்…
The post பாலியல் குற்றச்சாட்டு: ஒரு மாதத்திற்குப் பின் கிரிக்கெட் நட்சத்திரம் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாலியல் குற்றச்சாட்டு: ஒரு மாதத்திற்குப் பின் கிரிக்கெட் நட்சத்திரம் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
