ஃபேஸ்புக் ஊடாக சம்பந்தனின் சிறப்புரிமையை மீறியதாக ஒப்புக்கொண்ட நபர் மன்னிப்புக் கோரினார்!
12 view
சமூக ஊடகமான ஃபேஸ்புக் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபர் அது தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தொடர்பில் அவதூறான வகையில் வெளியிட்ட காணொளியின் ஊடாக அவருடைய சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த முகப்புத்தகக் கணக்கின் உரிமையாளர் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார். நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் இந்த முறைப்பாடு குறித்த விசாரணை நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை தான்னால் மீறப்பட்டுள்ளது என்பதைக் குறித்த நபர் இங்கு ஏற்றுக்கொண்டமையால் இரு தரப்பினரின் இணக்கத்துக்கு அமைய நிபந்தனையுடன் குறித்த சம்பவம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கமைய இது தொடர்பில் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக்கோரி பிரசித்தமான பத்திரிகையொன்றிலும் சம்பந்தப்பட்ட…
The post ஃபேஸ்புக் ஊடாக சம்பந்தனின் சிறப்புரிமையை மீறியதாக ஒப்புக்கொண்ட நபர் மன்னிப்புக் கோரினார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஃபேஸ்புக் ஊடாக சம்பந்தனின் சிறப்புரிமையை மீறியதாக ஒப்புக்கொண்ட நபர் மன்னிப்புக் கோரினார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
