நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்! – கஜேந்திரகுமார் கோரிக்கை
39 view
“பிரதமர், ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதவி விலகிய பின்னர் நாடாளுமன்றத்தில் மக்களின் விருப்பம் பிரதிபலிக்கப்படவில்லை. எனவே, நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிலையியல் கட்டளைகள் திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு கட்சியைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் நாடாளுமன்றத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளேன். இதில் குழு முறைமைகள் பலப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது. இந்தக் குழுக்களின் ஊடாகவே முக்கியமான வேலைகளை செயற்படுத்த முடியுமாக இருக்கும். நிலையியல் கட்டளை திருத்தங்கள் தொடர்பான விடயங்களில் அதனை நடைமுறை ரீதியில் திருத்த வேண்டும். நாடாளுமன்றக் குழுக்கள், நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையாக இருக்க வேண்டும். அத்துடன் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படுகின்றது. ஒரு வருடமாக நான்…
The post நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்! – கஜேந்திரகுமார் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்! – கஜேந்திரகுமார் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
