10 நாட்களாகியும் கரைக்கு திரும்பாத மீனவர்கள் – தேடுதல் நடவடிக்கை மந்தகதியில்!
18 view
கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதுடன் மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து கடந்த 26.09.2022 அன்று மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேற்குறித்த விடயத்தை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேற்குறித்த மீனவர்கள் காணாமல் சென்ற விடயத்தை சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு மீனவ சங்கத்தினர் கொண்டு வந்திருந்த போதிலும் தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமல் போன படகு உரிமையாளரினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாவது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு ஏதாவது கொடுப்பனவையோ அல்லது நஷ்டஈட்டையோ பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் எவரும் இதுவரை…
The post 10 நாட்களாகியும் கரைக்கு திரும்பாத மீனவர்கள் – தேடுதல் நடவடிக்கை மந்தகதியில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 10 நாட்களாகியும் கரைக்கு திரும்பாத மீனவர்கள் – தேடுதல் நடவடிக்கை மந்தகதியில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
