யாழ்.பல்கலை நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் ரமேஸ் மதுசங்கவிற்கு!
18 view
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” இவ் ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா 2022 ஐப்பசி இன்று 06,07,08 ஆம் திகதிகளில் நடைபெறுகின்றது. 07.10.2022 அன்று நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவனான புத்தளம் மாவட்டத்தில் கொட்டகை என்னும் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர்…
The post யாழ்.பல்கலை நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் ரமேஸ் மதுசங்கவிற்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.பல்கலை நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் ரமேஸ் மதுசங்கவிற்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
