எரிபொருள்களின் விலைகள் மீண்டும் குறைப்பு-விசேட அறிவிப்பு வெளியானது!
32 view
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவதற்கேற்ப அடுத்த இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் -உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைப்பை தொடர்ந்து தேசிய மட்டத்தில் எரிபொருள் விலையை தீர்மானிக்க முடியாது. பெற்றோல் இறக்குமதியில் இலாபம் கிடைக்கப் பெற்றதால் விலை குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் சிக்கல் காணப்படுகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவர். மசகு எண்ணெய் ஊடாக மாத்திரம் நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.மொத்த எரிபொருள் தேவையின் 30 சதவீதமளவு மாத்திரம் தான் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஊடாக பெற்றுக்கொள்ளப் படுகிறது. 70 சதவீதமளவு எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை…
The post எரிபொருள்களின் விலைகள் மீண்டும் குறைப்பு-விசேட அறிவிப்பு வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிபொருள்களின் விலைகள் மீண்டும் குறைப்பு-விசேட அறிவிப்பு வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
