குறைக்கப்பட்டது லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை!
11 view
லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எரிவாயுவின் விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4 ஆயிரத்து 280 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 107 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ஆயிரத்து 720 ரூபாவாக காணப்படுகின்றது. மேலும் லிட்ரோ 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை 48 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 800 ரூபாவாக காணப்படுகின்றது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
The post குறைக்கப்பட்டது லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குறைக்கப்பட்டது லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
