நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் வெளியீடு குறித்து தகவல் !!

54 view
நடிகர் வடிவேலுவின்  புதிய படமான  ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின்  வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாப்பாத்திரமான நாய் சேகர் பட கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது. நாய் சேகர் என்ற பெயரில் முன்னரே சதிஷ் படம் அறிவிக்கப்பட்டதால் இந்தப் படத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த நிலையில் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையைப் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ படத்திலும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.
The post நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் வெளியீடு குறித்து தகவல் !! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース