கிழக்கை முழுமையாகச் சீரழித்துவிட்டார் கோட்டாவின் ஆளுநர்! – சாணக்கியன் கடும் சீற்றம்
39 view
கோட்டாபய ராஜபக்சவின் வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்திவிட்டார் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன், மயிலந்தனை மேய்ச்சல் தரை தொடர்பில் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்ய நேரிடும் எனவும் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்வாறு தெரிவித்த சாணக்கியன் எம்.பி., மேலும் பேசுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகள் மேய்ச்சல் தரைகள் என இதுவரை வர்த்தமானி வெளியிடப்படவில்லை. கோட்டாபய ராஜபக்சவின் வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்தியுள்ளார். இந்த மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் முறையாகச் செயற்படவில்லை. இதனால் பால் உற்பத்தி தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. பால் உற்பத்தியாளர்கள் மேய்ச்சல் தரை இல்லாத காரணத்தால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். மயிலந்தனைப் பகுதியில் அத்துமீறிய வகையில் ஒரு தரப்பினர் கூடாரமிட்டுள்ளார்கள். இந்தச்…
The post கிழக்கை முழுமையாகச் சீரழித்துவிட்டார் கோட்டாவின் ஆளுநர்! – சாணக்கியன் கடும் சீற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கை முழுமையாகச் சீரழித்துவிட்டார் கோட்டாவின் ஆளுநர்! – சாணக்கியன் கடும் சீற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
