எதிர்கால சந்ததியினை காப்பாற்ற அணிதிரளுங்கள்-யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் அழைப்பு!
28 view
யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை சமூகத்தில் இருக்கின்ற ஒரு பெரிய தீமையாக வளர்ந்து வருகின்றது. அதனை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த போதைப் பொருள் பாவனையால் அன்றாடம் எத்தனையோ இளைஞர் யுவதிகள், பாடசாலை மாணவ மாணவிகள் இதற்கு அடிமையாவதை கேள்விப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பலர் தற்கொலை செய்கின்றார்கள் பலர் நோய்வாய்ப்படுகின்றார்கள், குடும்பங்களிலே பிரச்சனை பெற்றோர்கள் கவலையோடு இருக்கின்றார்கள். ஆனபடியால் இந்த நிலை வர வர மிகவும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூட இது பற்றி சொல்லியிருந்தார் கடந்த வருடத்தை விட இந்த வருடம் இரண்டு மடங்காக இந்த போதைப்பொருள் பாவனை அதிகரித்து இருக்கின்றது. ஆகவே இதனை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது நாங்கள் எல்லாருமாக இணைந்து இதற்கு…
The post எதிர்கால சந்ததியினை காப்பாற்ற அணிதிரளுங்கள்-யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்கால சந்ததியினை காப்பாற்ற அணிதிரளுங்கள்-யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
