துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் பொறுப்புக்கள் பிரேமலால் ஜயசேகரவிடம் கையளிப்பு

30 view
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தனது அமைச்சின் கீழ் உள்ள பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகளை இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவிடம் கையளித்து அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இதன் விளைவாக பலாலி, மட்டக்களப்பு, இரத்மலானை விமான நிலையங்களின் அபிவிருத்திகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்துடன், காங்கேசன்;துறை மற்றும் ஒலுவில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதும் அவரது பணிகளில் அடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு இராஜாங்க அமைச்சர் ஆதரவளிக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் பொறுப்புக்கள் பிரேமலால் ஜயசேகரவிடம் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース