கொழும்பில் தீயில் வீடு இழந்த மக்கள் சீற்றம்: நாங்கள் வீடுதான் கேட்கிறோம்
29 view
கொழும்பு, செப்.30 கொழும்பு – பாலத்துறை – கஜீமாவத்தை பகுதியிலுள்ள தற்காலிக வீட்டுத் தொகுதியொன்றில் சில நாள்களுக்கு முன்பு பரவிய தீயினால் சுமார் 80 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன. அத்துடன், மேலும் சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. தீ விபத்தினால் சுமார் 220 பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இரவு 7.30 அளவில் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தீயணைப்பு பிரிவு, கடற்படை, போலீஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தினால் உயிர் சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. கஜீமாவத்தை பகுதியில் கடந்த பல வருட காலமாக சுமார் நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக குடியிருப்புக்களை அமைந்து, வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் மக்கள் சட்டவிரோதமான முறையில் குடியிருப்புக்களை அமைத்து வாழ்ந்து…
The post கொழும்பில் தீயில் வீடு இழந்த மக்கள் சீற்றம்: நாங்கள் வீடுதான் கேட்கிறோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் தீயில் வீடு இழந்த மக்கள் சீற்றம்: நாங்கள் வீடுதான் கேட்கிறோம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
