ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் பும்ரா விளையாடுவது சந்தேகம்!
30 view
இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, காயம் காரணமாக, எதிர்வரும் ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் களம் காண முடியாதெனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு அறுவைச் சிகிச்சை ஏதும் தேவை இல்லை எனவும், தொடர்ந்து ஓய்வில் இருக்கும் பட்சத்தில் அந்தக் காயம் தானாகவே குணமடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஓய்வு மற்றும் சிகிச்சைக்காக அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் பயிற்சி நிலையத்துக்கு சென்றுள்ளார். பும்ரா உலகக்கிண்ணத் தொடரில் விளையாடத பட்சத்தில், மேலதிக வீரர்களாக உள்ள தீபக் சஹார், முகமது ஷமி ஆகியோரில் ஒருவர் பிரதான அணியில் இணைத்துக் கொள்ளப்படுவர். இதனிடையே தற்போது நடைபெற்று வரும் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான தொடரில், பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஜ் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே உபாதைக் காரணமாக சகலதுறை…
The post ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் பும்ரா விளையாடுவது சந்தேகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் பும்ரா விளையாடுவது சந்தேகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
