யாழில் தீவிரமடையும் அவலங்கள்:10சிறுமிகள் வைத்தியசாலையில் சிகிச்சை!
28 view
யாழில் ரிக்ரொக் செயலிக்கு அடிமையாகி , அதன்மூலம் காதல் வயப்பட்ட 10 சிறுமிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் உளவளச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அதீத அலைபேசிப் பாவனை காரணமாக இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 16 சிறுவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் உளவளச் சிகிச்சைப் பிரிவில் பெற்றுவருகின்றனர் . அவர்களில் 10 பேர் சிறுமிகள் . இவர்கள் ‘ ரிக்ரொக் ‘ செயலியைப் பயன்படுத்தி – காலப்போக்கில் அதற்கு அடிமையாகி , பின் அதன்மூலம் காதல் வயப்பட்டு – உளநலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதர 6 சிறுவர்கள் , நாளின் கணிசமான பகுதியை அலைபேசிக்குள் தொலைத்துக் கொண்டவர்கள் . அலைபேசிப் பயன்பாட்டில் இருந்து மீளமுடியாத நிலையில் அவர்கள் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர் . அதீத அலைபேசிப் பாவனை தொடர்பில் மருத்துவர்கள் தெரிவித்ததாவது : யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப் பொருள்…
The post யாழில் தீவிரமடையும் அவலங்கள்:10சிறுமிகள் வைத்தியசாலையில் சிகிச்சை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் தீவிரமடையும் அவலங்கள்:10சிறுமிகள் வைத்தியசாலையில் சிகிச்சை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
