இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகும் மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
27 view
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகி – சிகிச்சைக்கு வரும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன . அத்துடன் , அலைபேசிகளை அதிகளவில் பயன்படுத்தும் மாணவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளன இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ் தெரிவித்துள்ளார் . பெற்றோர் தமது பிள்ளைகளின் நடவடிக்கையில் கூடுதல் அக்கறையுடன் இருக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார் . இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது : தற்காலத்தில் அலைபேசிகளின் பயன் பாடுகள் இளைஞர்களிடம் மட்டுமல்லாமல் மாணவச் சமூகத்திடமும் தீவிரம் பெற்றுள்ளன . தரம் ஒன்பதுக்கு மேற்பட்ட மாணவர்களில் 97 வீதமானவர்கள் இன்று அலைபேசிகளைச் சொந்தமாக வைத்திருப்பவர்களாக – அல்லது அதீத மாகப் பயன்படுத்துகின்றவர்களாக இருக்கின்றனர் . அதிலும் குறிப்பாக 12 வயது தொடக்கம் 17 வயதுக்கு இடைப் பட்ட சிறுவர்கள் இணைய விளையாட்டுக்களில் ( வீடியோ கேம் ) தீவிரமாக ஈடுபடுகின்றனர் . இந்த…
The post இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகும் மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகும் மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
