தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை நாட வேண்டி வரும்- எச்சரிக்கை விடுத்த சம்பந்தன் எம்.பி!
29 view
நாங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றோம். அதற்கான பேச்சை விரைவில் ஆரம்பிக்கப் போகின்றோம் என்றுகூறி தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றாமல் , பேச்சுக்களை இதயசுத்தியுடன் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார் . தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் , முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு விரைவில் பேச்சை ஆரம்பிக்கும் ‘ என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருந்தார் . இது தொடர் பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது தமிழ் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினை களை எதிர்நோக்கி வருகின்றனர் . இதில் முதன்மையானது தேசிய இனப்பிரச்சினை . 1949 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பல்வேறு விதமான முயற்சி களை மேற்கொண்டு வருகின்றோம் . தீர்வு விடயம் சம்பந்தமாக தமிழ்த் தரப்பினர் திறந்த மனதுடன் இலங்கை அரசுடன் பேச்சை நடத்தியுள்ளனர்.…
The post தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை நாட வேண்டி வரும்- எச்சரிக்கை விடுத்த சம்பந்தன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை நாட வேண்டி வரும்- எச்சரிக்கை விடுத்த சம்பந்தன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
