தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் ரி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

36 view
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில், இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது. திருவானந்தபுரத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மஹாராஜ் 41 ஓட்டங்களையும் மார்கிரம் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் தீபக் சாஹர் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 107 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 16.4 ஓவர்கள் நிறைவில் 2…
The post தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் ரி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース