நினைவேந்தலைக் குழப்பியது மணி அணியும், ஜனநாயக போராளிக் கட்சியுமே! – சுகாஷ் காட்டம்
48 view
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைக் குழப்பியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்: தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வித்தியாசமானது. ஏனைய நினைவேந்தல் போன்று அல்ல. சர்வதேசம் வரை அவரின் கோரிக்கை சென்றது. இதில் இந்தியாவின் பங்கு அதிமாக உள்ளது. அழுது புலம்புவது மட்டும் நினைவேந்தல் அல்ல. திலீபனின் நினைவேந்தலில் அவரின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அரசியல் தீர்வுகள் பேசப்பட வேண்டும். அவரின் கொள்கைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் நடக்கும் சதிக்கும்பல் இதனை தடுக்கிறது. மாவீரர் நாள் அன்று, தலைவர் கூட அரசியல் பேசுவார். ஏன் என்றால் நினைவேந்தல் வெறும் அழுது புலம்பும் நிகழ்வு இல்லை. எமது அபிலாஷைகளை நாம் அங்கே பேச வேண்டும். நாம் மட்டுமே அன்று இராணுவ அடக்கு முறைகளுக்கு மத்தியில்…
The post நினைவேந்தலைக் குழப்பியது மணி அணியும், ஜனநாயக போராளிக் கட்சியுமே! – சுகாஷ் காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நினைவேந்தலைக் குழப்பியது மணி அணியும், ஜனநாயக போராளிக் கட்சியுமே! – சுகாஷ் காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
