குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற கிராமிய கைத்தொழில் சந்தை மற்றும் கண்காட்சி!
38 view
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கிராமிய சிறு கைத்தொழில்களை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் ஒருபகுதியாக குச்சவெளி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமியக் கைத்தொழில் பொருட்களின் சந்தை மற்றும் பொருள் கண்காட்சி (27) குச்சவெளி பிரதேச செயலாளர் திரு.கே.குணநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உள்ளூர் கைத்தொழில் உற்பத்தியாளர்களின் சந்தையுடனான கண்காட்சிக் கூடத்தை திறந்து வைத்ததுடன்குச்சவெளி தவிசாளர் உரையாற்றுகையில்: நவீன உற்பத்திகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு செயற்கைச் சூழலுக்குள் நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதால், பாரம்பரிய உற்பத்திகள் மங்கி மறைந்து வருகின்றன அத்துடன் நவீன அவசர உற்பத்திகளின் ஆக்கிரமிப்பின் விளைவாக உள்ளுர் கிராம உற்பத்திகளுக்கு தேசிய சந்தை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. தற்போதைய நவீன அவசர உலகில் மேற்கொள்ளப்படும் உற்பத்திகள் இயற்கைக்குச் சவால் விடும்படியாகவும், சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிப்பதாகவும் அமைந்திருக்கின்ற…
The post குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற கிராமிய கைத்தொழில் சந்தை மற்றும் கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற கிராமிய கைத்தொழில் சந்தை மற்றும் கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
