தேர்தல் பிரசார செலவுகளை திருத்துவதற்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
29 view
தேர்தல் பிரசார செலவுகளை திருத்துவதற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் வாக்குகளைப் பெறுவதற்காக ஏற்படும் அதிகப்படியான செலவுகளைக் கட்டுப்படுத்துவதே இந்தப் புதிய சட்டமூலத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் சட்ட வரைவுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த சட்டமூலத்தை சீர்திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவும் தேர்தல் சட்டங்கள் குறித்து பரிந்துரைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்தச்சட்டம் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தவும் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தவும் தபால் மூலம் வாக்களிக்க தகுதியில்லாத, ஆனால் தேர்தல் நாளில் கடமையாற்றுபவர்களுக்கு வாக்களிக்க வசதியை ஏற்படுத்தவும் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்க விதிகளை சட்டப்பூர்வமாக்குதல், தேர்தல் முறைப்பாடுகளை துரிதமாக…
The post தேர்தல் பிரசார செலவுகளை திருத்துவதற்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் பிரசார செலவுகளை திருத்துவதற்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
