அதியுயர் பாதுகாப்பு வலயம் பிரகடனம் அடிப்படை மனித உரிமை மீறலாகும்! – கம்மன்பில
34 view
பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீதிகள் மற்றும் இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயமாக ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளமை அடிப்படை மனித உரிமை மீறலாகும். நிறைவேற்று அதிகாரத்தை வரையறையில்லாமல் அமுல்பத்தினால் அதன் எதிர்தாக்கம் பாரதூரமாக அமையும் என்பதற்கு வரலாற்றில் பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக உள்ளன என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திடீரென 1955ஆம் ஆண்டின் 32ஆம் இலக்கம் கொண்ட அரச இரகசிய சட்டக் கோவையின் 2ஆவது பிரிவின் கீழ் தலைநகரின் முக்கிய இடங்களை விசேட வர்த்தமானியின் ஊடாக அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தியுள்ளார். 1955ஆம் ஆண்டின் 32ஆம் இலக்கத்தின் பிரகாரம் ஒரு பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு, இருப்பினும் தடை செய்யப்பட்ட பகுதி எவ்வளவு…
The post அதியுயர் பாதுகாப்பு வலயம் பிரகடனம் அடிப்படை மனித உரிமை மீறலாகும்! – கம்மன்பில appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதியுயர் பாதுகாப்பு வலயம் பிரகடனம் அடிப்படை மனித உரிமை மீறலாகும்! – கம்மன்பில appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
