246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி: பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை சமநிலை செய்தது இலங்கை அணி!
15 view
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியுள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 378 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சந்திமால் 80 ஓட்டங்களையும் டிக்வெல்ல 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நஷிம் ஷா மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் நாஸ் 2 விக்கெட்டுகளையும் நவுமான் அலி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சல்மன் 62…
The post 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி: பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை சமநிலை செய்தது இலங்கை அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி: பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை சமநிலை செய்தது இலங்கை அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
