ஈராக்கில் உள்ள துருக்கி தூதரகம் மீது தாக்குதல்!
15 view
ஈராக்கின் வடக்கு நகரமான மொசூலில் உள்ள துருக்கியின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று துருக்கிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஈராக்கின் மோசூல் நகரில் உள்ள தனது தூதரகம் மீதான தாக்குதலுக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரக அதிகாரிகளுக்கும் தூதரக பணிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது ஈராக்கின் பொறுப்பு மற்றும் கடமை ஆகும் என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மோசூலில் உள்ள துருக்கியின் தூதரகம் நேற்று (புதன்கிழமை) காலை தாக்கப்பட்டதாக அதன் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும் இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என ஈராக்கிடம் துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘இராஜதந்திர மற்றும் தூதரகப் பணிகளைப் பாதுகாப்பதில் ஈராக் அதிகாரிகளின் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு நாங்கள் உறுதியாகக் கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளது.…
The post ஈராக்கில் உள்ள துருக்கி தூதரகம் மீது தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈராக்கில் உள்ள துருக்கி தூதரகம் மீது தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
