அரசியல், பொருளாதார நெருக்கடி; இந்திய – இலங்கை வர்த்தகத்தில் வீழ்ச்சி நிலை!
18 view
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து கீழ்நோக்கி செல்வதால், அண்டை நாடான இந்தியாவுடனான வர்த்தகம் நிறுத்தப்பட்டு வருகிறது இதனை இந்திய செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கைப் பங்காளிகளிடமிருந்து பணம் வராது என்ற அச்சத்தில் பல இந்திய ஏற்றுமதியாளர்கள் வர்த்தகத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இந்தியா இலங்கையின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகும். மேலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் நாடுகளில் ஒன்றாகும். பெருகிவரும் இயல்புநிலை அபாயங்கள் காரணமாக இலங்கையின் கொள்வனவாளர்களிடம் இருந்து புதிய கட்டளைகளை பெறுவதில் தாம் தயங்குவதாக மும்பையைச் சேர்ந்த ஒரு சிறந்த சீனி ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஒவ்வொரு மாதமும் உட்கொள்ளும் 40-50000 தொன் சீனியில் 90வீதம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பொறியியல் பொருட்கள், இரசாயனங்கள், இரும்பு, விவசாயப் பொருட்கள், எரிபொருள், மருந்துப் பொருட்கள், பால் மா, வெங்காயம் மற்றும் திராட்சை ஆகியவை இலங்கைக்கான இந்திய ஏற்றுமதிகளில் உள்ளடங்குகின்றன. 2021-22 நிதியாண்டில் இந்தியா குறைந்தது…
The post அரசியல், பொருளாதார நெருக்கடி; இந்திய – இலங்கை வர்த்தகத்தில் வீழ்ச்சி நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல், பொருளாதார நெருக்கடி; இந்திய – இலங்கை வர்த்தகத்தில் வீழ்ச்சி நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
