போராட்டகாரர்களை 71, 89இல் ஏற்பட்ட கிளர்ச்சிகளை போன்று அடக்கியிருக்க வேண்டும்! மொட்டு எம்.பி. ஆவேசம்
16 view
மே 9ஆம் திகதி கோட்டகோகம பிரதேசத்தில் தாக்குதல் நடத்த வந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு செயற்பாட்டாளர்களை கடுமையாக விமர்சித்தார். போராட்டகாரர்களை, 71, 89 இல் ஏற்பட்ட கிளர்ச்சிகளை போன்று அடக்கியிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாததால், கோட்டாபய ராஜபக்ச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டதாகவும் தெரிவித்தார். போராட்டம் நடக்கும் பகுதியில் போதைக்கு அடிமையானவர்கள், கஞ்சா அடிமைகள், ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், 2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவிற்கு இவ் நாட்டை வழங்கும் போது நம் நாடு பாரிய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் காணப்பட்டது. அந் நேரங்களில் 2 ட்ரில்லியன் பெறுமதி கடன் ஏற்பட்டிருந்தது. அத்துடன் யுத்தமும் நிறைவுற்றிருந்தது. பின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் செயற்பாடுகளினால் மட்டுமே அன்று நுரைச்சோலை அமைத்து நமக்கு மின்சாரம்…
The post போராட்டகாரர்களை 71, 89இல் ஏற்பட்ட கிளர்ச்சிகளை போன்று அடக்கியிருக்க வேண்டும்! மொட்டு எம்.பி. ஆவேசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போராட்டகாரர்களை 71, 89இல் ஏற்பட்ட கிளர்ச்சிகளை போன்று அடக்கியிருக்க வேண்டும்! மொட்டு எம்.பி. ஆவேசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
