பாடசாலைகள் மூடப்பட்டிருப்பது எதிர்கால சமுதாயத்தின் கல்விமான்களை உருவாக்குவதில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்-கேசவதாசன் சுட்டிக்காட்டு!
16 view
தற்பொழுது நாட்டில் நிலவி வருகின்ற எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பது எங்களுடைய எதிர்கால சமுதாயத்தின் கல்விமான்களை உருவாக்குவதில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடுமென சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கேசவதாசன் தெரிவித்தார். இன்று சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்த காலத்தில் நான் தொண்டராசிரியரா வன்னி பெருநிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொழுது பதுங்குகுழியிலும் பாடம் பயில்வோம் என்ற அடிப்படையில் விமான குண்டு வீசுக்கள் இடம்பெற்ற நிலையில் கூட எங்களுடைய மாணவ செல்வங்கள் பாடசாலைகளில் பொது இளைஞர்களால் அமைக்கப்பட்ட பதுங்குகுழியினுள் இருந்துவிட்டு மீள பாடங்களை கற்றார்கள் . அவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் யுத்த காலத்தில் கூட ஐந்து நாட்களும் பாடசாலைகள் இடம்பெற்றது .சிறந்த பெறுபேறுகளையும் மாணவர்கள் பெற்றிருந்தார்கள். ஆனால் தற்காலத்தில் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் மோட்டார் வாகனங்களில்…
The post பாடசாலைகள் மூடப்பட்டிருப்பது எதிர்கால சமுதாயத்தின் கல்விமான்களை உருவாக்குவதில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்-கேசவதாசன் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலைகள் மூடப்பட்டிருப்பது எதிர்கால சமுதாயத்தின் கல்விமான்களை உருவாக்குவதில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்-கேசவதாசன் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
