அடுத்த மாத நடுப்பகுதியின் பின்னர் எரிபொருள் வழங்குவதில் சிக்கல்! – மத்திய வங்கி ஆளுநர்
16 view
கட்டணம் செலுத்தப்பட்ட எரிபொருள் கப்பல்களில் இருந்து, அடுத்த மாத தொடக்கம் வரை எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனினும், எதிர்வரும் காலத்திற்கான எரிபொருள் கொள்வனவு தொடர்பில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகிறார். மாதாந்தம் எரிபொருளுக்கான செலவு சுமார் 550 மில்லியன் டொலர்களாகும். அவற்றில் வாகனங்களுக்கான எரிபொருள் கொள்வனவுக்கான செலவு 350 – 400 மில்லியன் டொலர்களாகும். இதற்கு தேவையான நிதியை இந்தியா அல்லது வேறு நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியேற்படுகிறது, எனினும், தற்போது அவ்வாறான நிதியை பெறுவது கடினமானது. எவ்வாறாயினும், அடுத்த மாத நடுப்பகுதி வரை மட்டுமே மக்களுக்கு குறையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். ஏதோவொரு வகையில் இந்தியா, சீனா அல்லது வேறு எந்த நாடும் சுமார் ஒரு பில்லியன் டொலர்களை வழங்கினால் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு எவ்வித சிக்கலுமின்றி எரிபொருளை வழங்க முடியும். இல்லையெனில் எரிபொருள் நெருக்கடி தொடரலாம். ஆனால்,…
The post அடுத்த மாத நடுப்பகுதியின் பின்னர் எரிபொருள் வழங்குவதில் சிக்கல்! – மத்திய வங்கி ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த மாத நடுப்பகுதியின் பின்னர் எரிபொருள் வழங்குவதில் சிக்கல்! – மத்திய வங்கி ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
