யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் முதலாவது அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு
17 view
யாழ், ஜுலை 25 க. பொ. த உயர்தர 2019 ஆம் ஆண்டு கலைப் பிரிவில் தோற்றி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் கலைப் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்வர்களில் சுமார் 50 மாணவர்கள் இந்து கற்கைகள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வியாண்டுக்காகப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வே எதிர்வரும் 27 ஆம் திகதி, புதன்கிழமை காலை அறிமுக வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை நிறுவிய காலத்தில் இருந்தே இந்து கற்கைகளுக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் 2019 ஆம் ஆண்டே அதற்கான அங்கீகாரம் கிடைத்தது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக அப்போதைய நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒப்பமிட்டு 2019 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி…
The post யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் முதலாவது அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் முதலாவது அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
