யாழிலிருந்து கடல்வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவிய போலந்து நாட்டவர்!

14 view
இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்ற போலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய குற்றத்தில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து , தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது. தமிழகம் வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் அநாதரவான நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை படகொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த படகானது காற்று அடித்து (பலூன் போன்று) பாவிக்க கூடிய படகு ஆகும். அதில் இருவர் பயணம் செய்ய கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுழியோடிகள் பாவிக்கும் காலணி , படகுக்கு காற்று நிரப்பும் பம் , ஜாக்கெட் , சுழியோடிகள் கடலினுள் பாவிக்கும் கண்ணாடிகள் , 18கும் மேற்பட்ட தண்ணீர் போத்தல்கள் , மிதக்கும் பைகள் என படகுக்கு அருகில் இருந்து சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்தே இந்த படகின் மூலம் தமிழகத்தினுள் ஊடுருவி இருக்கலாம்…
The post யாழிலிருந்து கடல்வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவிய போலந்து நாட்டவர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース