கோட்டாவை கைது செய்ய ஒப்பமிடுவோம்! உலக தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
14 view
சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் சிங்கப்பூர் தூதரகங்களை நோக்கி கவனயீர்ப்பு போராட்டங்களையும், கோரிக்கை மனுவினை கையளித்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அதன்தொடர்சியாக தற்போது (ஒப்பிடுவதற்கான இணைப்பு : https://chng.it/rQVfCj4KdQ ) இக்கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளது. இது தொடர்பில் உலகத்தமிழ் உறவுகளை நோக்கி அழைப்பினை விடுத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்,“இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்தவர். இதற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்பு சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவா சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின்…
The post கோட்டாவை கைது செய்ய ஒப்பமிடுவோம்! உலக தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டாவை கைது செய்ய ஒப்பமிடுவோம்! உலக தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
