பஸ் சேவைகள் இல்லாமையால் மக்கள் கடும் சிரமம்
6 view
யாழ்ப்பாணம்,ஜுலை 25 பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கத்தினர் தம்மை நட்டாற்றில் விட்டு சென்றுள்ளதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்து சங்கத்தினர் உள்ளிட்டோர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையே இரு தரப்பினரும் அறிவித்து இருந்தனர் இந்நிலையில் இன்றைய தினம் காலை பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கத்தினர் (750 சாலை வழித்தட) பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான தமது சேவையை நடாத்தினார்கள். தாம் டீசல் கோரி போராடிய போது , தமக்கு ஆதரவாக மற்றைய சங்கங்கள் போராடவில்லை என்றும் , அதேவேளை தமக்கான டீசலை பருத்தித்துறை சாலை (டிப்போ) வழங்குவதாகவும் தெரிவித்து அவர்கள் சேவையில் ஈடுபட்டனர். அதனால் வடமராட்சி பக்கங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு , வேலை நிமிர்த்தம் வருபவர்கள், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வருபவர்கள் , மாதாந்த கிளினிக் வருபவர்கள் , பணியிடங்களுக்கு வரும் ஊழியர்கள் என பலரும்…
The post பஸ் சேவைகள் இல்லாமையால் மக்கள் கடும் சிரமம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பஸ் சேவைகள் இல்லாமையால் மக்கள் கடும் சிரமம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
