யாசகர்கள் மீதான தாக்குதலுடனேயே புதிய அரசாங்கத்தின் பணி ஆரம்பம்! சோசலிச இளைஞர் சங்கம்
40 view
கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட பூமியில் இரவில் வந்து தங்கிவிட்டு செல்லும் யாசகர்கள் மீதே பாதுகாப்பு தரப்பினர் முதலில் தாக்குதலை மேற்கொண்டனர் என்றும் அதன் பின்பே போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். சோசலிச இளைஞர் சங்கம் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், யாசகர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டே ரணில் ராஜபக்ஷவின் அரசாங்கம் தனது பணிகளை ஆரம்பித்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாக கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தரப்பினர் மீது ரணில் ராஜபக்ஷ முதல் வேளையாக அரச ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டார். இவ்வாறான செயல்பாடுகளை நாம் எவ்வகையிலும் அனுமதிக்கப்போவதில்லை என்பதுடன் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. சகல இடங்களிலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு இறுதியில் கொழும்பு காலிமுகத்திடலில் சகலரும் ஒன்றுக்கூடி தொடர்…
The post யாசகர்கள் மீதான தாக்குதலுடனேயே புதிய அரசாங்கத்தின் பணி ஆரம்பம்! சோசலிச இளைஞர் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாசகர்கள் மீதான தாக்குதலுடனேயே புதிய அரசாங்கத்தின் பணி ஆரம்பம்! சோசலிச இளைஞர் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
