வன்முறைகளை கட்டவிழ்ப்பதை பணியாக்கியுள்ளார் ஜனாதிபதி!
16 view
நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு பதிலாக புதிய ஜனாதிபதி வன்முறையை கட்டவிழ்க்கும் பணியை முதல் பணியாக ஆரம்பித்துள்ளார் என்று ஐக்கியமக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதியிடம் இந்த நாடானது எதனை எதிர்பார்க்கின்றது என்பதை முதலில் அவர் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதேஅவர் இதனை தெரிவித்துள்ளார். உண்மையில், தற்போதைய ஜனாதிபதி மக்கள் ஆணையில் ஜனாதிபதியாகவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளுடனேயே அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கோட்டாபய – ரணில் அரசாங்கத்திலிருந்து வெளியே வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்தது. எனினும், பாராளுமன்ற உறுப்பினர்களினன் நிலைப்பாட்டிலும் மக்களின் எண்ணப்பாட்டிலும் வேறுபாடு காணப்படுகின்றது. புதிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு மீளக்கட்டியெழுப்ப போகின்றார் என்பது எம் முன் உள்ளகேள்வியாக உள்ளது. இதே போன்று நாட்டு மக்கள் தற்போது வாழ்வாதார சுமையை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் வரிசையில் நிற்பது அதிகரித்து வருகின்றது.எரிவாயு, எரிபொருள்,பால்மா, அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு பெரும்…
The post வன்முறைகளை கட்டவிழ்ப்பதை பணியாக்கியுள்ளார் ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வன்முறைகளை கட்டவிழ்ப்பதை பணியாக்கியுள்ளார் ஜனாதிபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
