மட்டு நகரில் இயற்கை விவசாயத்துடன் கூடிய வீட்டுத்தோட்டம் அமைத்தல் தொடர்பான கருத்தரங்கு!(படங்கள் இணைப்பு)

27 view
மட்டக்களப்பு சைவ மங்கையர் கழகம் மற்றும் லியோ கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வீட்டுத்தோட்டம் அமைத்தல் தொடர்பான கருத்தரங்கு ஒன்று கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் “எமது போசணையில் வீட்டுத்தோட்டத்தின் பங்களிப்பு” எனும் தலைப்பில் கலாநிதி. க. பிரேமகுமார் , “இயற்கை விவசாயம்” எனும் தலைப்பில் பத்மநாதன் அவர்களும் பல்வேறு ஆலோசனைகளையும், விழிப்புணர்வுக் கருத்துக்களையும், தமது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். இக்கருத்தரங்கில் கல்லடிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பது பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதன் போது எமது பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள், போசணைப் பதார்த்தங்கள், விட்டமின்கள் போன்றவற்றின் முக்கியத்துவம், எமது உடலுக்குத் தேவையான அனைத்துப் போசணைகளையும் வீட்டுத் தோட்டங்களிலிருந்தே எவ்வாறு பெற்றுக்கொள்வது மற்றும் எந்தெந்த தாவரங்களில் என்னென்ன போசணைப் பதார்த்தங்கள் உள்ளன போன்ற பல்வேறு விடயங்கள் கலாநிதி.க.பிரேமகுமாரால் விளக்கமளிக்கப்பட்டது. அதேபோன்று இரசாயனங்களைத் தவிர்த்து இயற்கை முறையில் எவ்வாறு வீட்டுத்தோட்டத்தினை மேற்கொள்வது, சூழலுக்கும், மண்ணிற்கும் பாதிப்பற்ற முறையில் இயற்கையான பூச்சி விரட்டிகளைத் தயாரிப்பது,…
The post மட்டு நகரில் இயற்கை விவசாயத்துடன் கூடிய வீட்டுத்தோட்டம் அமைத்தல் தொடர்பான கருத்தரங்கு!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース