கடவுச்சீட்டு மோசடி தொடர்பான விசாரணையில் பொலிஸார் மற்றும் கடவுச்சீட்டு அதிகாரிகளுக்கும் தொடர்பு!
20 view
இலங்கை பிரஜைகளை உள்ளடக்கிய கடவுச்சீட்டு மோசடி தொடர்பான விசாரணையில் இந்திய பொலிஸார் மற்றும் கடவுச்சீட்டு அதிகாரிகள் உட்பட 41 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழக அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை பிரஜைகள் சிலர் வெளிநாடு செல்வதற்காக இந்திய கடவுச்சீட்டுகளை பெற முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, இந்த வழக்கை தீவிரவாத நடவடிக்கைகளை கையாளும் தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிராஞ்ச் மதுரை பிரிவு விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பாக 2019 செப்டம்பரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் வாங்கியது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 5 போலீஸ் அதிகாரிகள், 14 மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள், 2 தபால் துறை ஊழியர்கள் உள்பட 41 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 15 பேர் – நான்கு இலங்கை தமிழர்கள்…
The post கடவுச்சீட்டு மோசடி தொடர்பான விசாரணையில் பொலிஸார் மற்றும் கடவுச்சீட்டு அதிகாரிகளுக்கும் தொடர்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடவுச்சீட்டு மோசடி தொடர்பான விசாரணையில் பொலிஸார் மற்றும் கடவுச்சீட்டு அதிகாரிகளுக்கும் தொடர்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
