கோட்டாவின் மடத்தன முடிவால் நாடே நாசம்! – ஜனா எம்.பி குற்றச்சாட்டு
51 view
“கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த காலத்தில் எடுத்த மடத்தனமான முடிவுகளால் நாடு மோசமடைந்து நாசமடைந்திருக்கின்றது. எனவே, இந்நாட்டின் நிலையைக் கருத்தில்கொண்டு அவர் பதவி விலகிச் செல்ல வேண்டும்.” இவ்வாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வலியுறுத்தினார். நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள சூழ்நிலை எல்லோருக்கும் தெரியும். இலங்கை என்பதற்குப் பதிலாக எதுவுமே இல்லாத இலங்கை என்று பெயர் சூட்டக்கூடிய நிலையில் நாடு இருக்கின்றது. பெற்றோல் இல்லை, டீசல் இல்லை, எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் எதுவுமே இல்லை. ஊரடங்குச் சட்டம் போன்று வீதிகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அதேபோல் 40 வருடங்களுக்கு முன்பு சைக்கிளைக் கண்டவர்கள் பழைய சைக்கிள்களைத் திருத்தி வீதிகளில் செல்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதேவேளை, எமது…
The post கோட்டாவின் மடத்தன முடிவால் நாடே நாசம்! – ஜனா எம்.பி குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டாவின் மடத்தன முடிவால் நாடே நாசம்! – ஜனா எம்.பி குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
