ஈரானில் பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவர் கைது: பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் மறுப்பு!
16 view
ஈரானில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவர் உட்பட வெளிநாட்டினத்தவர்கள் சிலர், பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் மறுத்துள்ளது. ஈரானில் பிரித்தானிய தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என அந்நாட்டு வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவரான கில்ஸ் விட்டேக்கர் உட்பட வெளிநாட்டினத்தவர்கள் சிலர், உளவு பார்த்ததாகக் ஈரானின் புரட்சிகர காவலர்களால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஏவுகணைப் பயிற்சியின் போது தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்து மண் மாதிரிகளை உளவு பார்த்ததாகவும், மண் மாதிரிகளை எடுத்ததாகவும் கூறி இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை இந்த தூதர்களை கைது செய்ததாக ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது. ஈரானியப் படைகள் ஏவுகணைப் பயிற்சிகளை நடத்தும் தளத்திற்கு அருகில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், பின்னர் துணைத் தூதுவர் மன்னிப்புக் கேட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய புரட்சிகர…
The post ஈரானில் பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவர் கைது: பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் மறுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈரானில் பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவர் கைது: பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் மறுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
