உக்ரைனை விட இலங்கை செய்திகளே முன்னிலையில் ஆதிக்கம்
34 view
கொழும்பு, ஜுலை 07 உக்ரைன் போர் இன்னும் சர்வதேச தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தலாம். எனினும் போர்க்களத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள நாடான இலங்கையின் நெருக்கடி நிலை இன்று முக்கிய செய்தியாக மாறியுள்ளதாக தெ வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. பல மாதங்களாக, இலங்கை. பொருளாதார மரணச் சுழலில் உள்ளது. கடன் நெருக்கடி, முதலில் தொற்றுநோய்களின் அதிகரிப்பு மற்றும் பின்னர் உக்ரைன் மீதான ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக இலங்கையின் நிலை தீவிரமடைந்துள்ளது. உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்துகள் ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பில், இலங்கையில் 70 சதவீத குடும்பங்கள் உணவு நுகர்வை குறைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. உணவு விலை பணவீக்கம் சுமார் 57 சதவீதமாக உள்ளது. பெருகிவரும் பொதுமக்களின் கோபம் மற்றும் எதிர்ப்புக்கள் மே மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை வீழ்த்தியது, எனினும் நெருக்கடி நிலைமைகள் நீடித்தன. அத்துடன் பாதுகாப்புப் படையினருக்கும் சாதாரண, கோபமடைந்த பொதுமக்களுக்கும் இடையில் புதிய…
The post உக்ரைனை விட இலங்கை செய்திகளே முன்னிலையில் ஆதிக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரைனை விட இலங்கை செய்திகளே முன்னிலையில் ஆதிக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
