இலங்கையில் 6.26 மில்லியன் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

15 view
இலங்கையில் சுமார் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி இருப்பதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் அண்மைய அறிக்கையின்படி, இலங்கை மக்கள் பொருளாதார மற்றும் உணவு நெருக்கடிகளின் சுமைகளை தொடர்ந்து உணர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டின்படி, 10 குடும்பங்களில் 3 குடும்பங்கள் (6.26 மில்லியன் மக்கள்) உணவுப் பாதுகாப்பற்றவர்களாக இருக்கின்றனர், அவர்களில் 65,600 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாக இருக்கின்றனர். ஜூன் 2022ல் உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகள், போதுமான மற்றும் சத்தான உணவை உண்ணும் மக்களின் திறனை முடக்கியுள்ளது. மதிப்பிடப்பட்ட பெரும்பாலான குடும்பங்கள் (61 சதவீதம்) குறைந்த விருப்பமான மற்றும் குறைவான சத்துள்ள உணவை உண்பதுடன் உண்ணும் உணவின் அளவைக் குறைப்பது போன்ற உணவு அடிப்படையிலான சமாளிக்கும் உத்திகளை வழக்கமாகப் பயன்படுத்துகின்றன. ஐந்தில் இரண்டு குடும்பங்கள் போதுமான…
The post இலங்கையில் 6.26 மில்லியன் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース