பணம் அச்சிடுவது எப்போது நிறுத்தப்படும்?

41 view
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகளை எங்களால் வெற்றிகரமாக தொடர முடிந்தது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் பேச்சு மற்றும் பொருளாதார மீட்பு திட்டங்கள் பற்றி பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்தார். இது தொடர்பான பிரதமரின் உரை வருமாறு, இதற்கு முன்னரும் பல தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துடன் எமது நாடு பேச்சுக்களை நடத்தியிருக்கின்றது. ஆனால் இம்முறை நிலைமை முந்தைய எல்லா நிகழ்வுகளிலிருந்தும் வேறுபட்டது. கடந்த காலங்களில் நாம் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். அத்தகைய சூழ்நிலையில், இரு தரப்பினரும் EFF அல்லது நீட்டிக்கப்பட்ட கடன் வசதியில் உடன்பாட்டை எட்ட வேண்டும். இது ஒரு நேர்கோட்டில் நகர்வதைப் போன்றது. ஆனால் இப்போது நிலைமை வேறு, நாங்கள் இப்போது திவாலான நாடாக பேச்சுகளில் பங்கேற்கிறோம். எனவே, முந்தைய பேச்சுகளை விட கடினமான மற்றும் சிக்கலான சூழ்நிலையை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.…
The post பணம் அச்சிடுவது எப்போது நிறுத்தப்படும்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース