யாழில் இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : கவலை தெரிவித்த இளைஞர்!
26 view
யாழ்ப்பாணம் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை தொலைத்து விட்டு, பொதியை பெற இருந்தவரை தகாத வார்த்தைகளால் பேசி , மிரட்டியமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கான 6ஆயிரம் ரூபாய் பெறுமதியான உதிரிப்பாகம் ஒன்றினை கொழும்பில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு கொள்வனவு செய்து, அதனை யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தின் பொதிகள் சேவைகள் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு 600 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் குறித்த பொதியினை பெற சென்ற போது, பொதி தொலைந்து விட்டது என பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்துள்ளடன், பொதியினை தொலைத்தமையால் பொதியில் இருந்த பொருளின் விலையை தருமாறு கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.…
The post யாழில் இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : கவலை தெரிவித்த இளைஞர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : கவலை தெரிவித்த இளைஞர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
