100 மீற்றரை 10 செக்கன்களுக்குள் நிறைவு செய்த இலங்கை வீரர்
33 view
சுவிஸ், ஜுலை 04 இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுப்புன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களுக்குள் ஓடி முடித்து அரும்பெரும் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற ரெசிஸ்ப்ரின்ட் இன்டர்நெஷனல் 2022 மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 9.96 செக்கன்களில் நிறைவு செய்து புதிய தெற்காசிய மற்றும் தேசிய சாதனைகளை நிலைநாட்டிய யுப்புன் அபேகோன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அத்துடன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களுக்குள் ஓடிய முதலாவது தெற்காசிய வீரர் என்ற பெருமையையும் யுப்புன் அபேகோன் தனதாக்கிக்கொண்டார். அப் போட்டியில் கியூபா வீரர் மெனா ரேனியர் (9.99 செக்) இரண்டாம் இடத்தையும் பிரான்ஸ் வீரர் ஸெஸே மெபா மைக்கல் (9.99 செக்.) 3ஆம் இடத்தையும் பெற்றனர். அது மட்டுமல்லாமல் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை வேகமாக நிறைவு செய்த ஆசியர்களில் 4ஆவது இடத்தை யுப்புன் பெற்றுள்ளார். கடந்த…
The post 100 மீற்றரை 10 செக்கன்களுக்குள் நிறைவு செய்த இலங்கை வீரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 100 மீற்றரை 10 செக்கன்களுக்குள் நிறைவு செய்த இலங்கை வீரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
