3 மாவட்டங்களில் இன்று முதல் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஆரம்பம்
5 view
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று முதல் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வவுனியா, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களின் பிராந்திய அலுவலகங்களில் ஒரு நாள் சேவை அமுல்படுத்தப்படவுள்ளது. தற்போது, கொழும்பில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் மாத்திரமே ஒரு நாள் சேவை வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தின் கீழ், பிராந்திய அலுவலகத்தில் நேரம் மற்றும் திகதியை முன்பதிவு செய்த 100 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று நியமனங்களை பெற்றுக்கொள்ள முடியும். மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களும் சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணியை ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, முன் நியமனம் செய்யாத விண்ணப்பதாரர்கள் சேவைகளைப் பெற அலுவலகங்களுக்குச்…
The post 3 மாவட்டங்களில் இன்று முதல் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 3 மாவட்டங்களில் இன்று முதல் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
